.
(காரைதீவு நிருபர் சகா)
சம்மாந்துறை வலய ஆங்கிலபாட ஆசிரியர்களுள் இதுவரை க.பொ.த. சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டிற்குச் செல்லாத புதிய ஆங்கிலபாட ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சிப்பட்டறை நேற்று நடாத்தப்பட்டது.
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனை நடாத்திய இந்த பட்டறைக்கு வளவாளர்களான வலய ஆங்கிலபாட சிரேஸ்ட ஆசிரியர்களான ஏ.ஜே.தினேஸ் செல்வி எஸ்.பிரதீபா ஆகியோர் செயற்பட்டனர்.
விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் கிடைத்த அறிவு அனுபவங்கள் என்பனவற்றை ஏனைய புதிய ஆசிரியர்களுக்கு பகிர்தலே அப்பட்டறையின் நோக்கமாகும்.
வலய ஆங்கிலபாட உதவிக்கல்விப்பணிப்பாளர் அ.அப்துல்நசீர் தலைமையில் நடைபெற்ற இப்பட்டறை நிறைவில் வலயக்கல்விப்பணிபபாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் பிரதமஅதிதியாகக்கலந்துகொண்டு வலயமட்ட ஆங்கிலதினப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.
இப்பட்டறை சம்மாந்துறை ஆசிரியர் மத்திய நிலையத்தில் நடைபெற்றது.பிரதிக்கல்விப்பணிப் பாளர் எஸ்.எம்.எம்.அமீர் கலந்து சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.




Post A Comment:
0 comments so far,add yours