சம்மாந்துறை முஸ்லிம் மத்தியகல்லூரி(தேசியபாடசாலை) யின்  புதிய அதிபராக  இலங்கை கல்வி நிருவாக சேவையின் (SLEAS) ஏ.எம்.நாஸீர் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர்   (21) தனது கடமைகளை  பொறுப்பேற்றுள்ளார். அச்சமயம் சம்மாந்துறை  வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் இதுவரை இருந்துவந்த அதிபர் முத்து இஸ்மாயில் உள்ளிட்ட பாடசாலை முகாமைத்துவசபையினர் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாப் நாஸீர் அலி அதிபர் யாழ் பல்கலைக்கழகத்தின்  (SLEAS(III), BCS(UOJ), PGDE)   பட்டத்தை பெற்றவர் ஆவார். அத்தோடு இலங்கை கல்வி நிருவாக சேவை (SLEAS)  பரீட்சையில் சித்தி பெற்றவருமாவார்.

கடந்த 4 வருடங்களாக  பாடசாலையின் அதிபராக இருந்து  பாடசாலையின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து சேவையாற்றிய A.C.A.M. இஸ்மாயில் (SLPS-1) அவர்களுக்கு  நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள். அத்தோடு புதிய அதிபரையும் வரவேற்றார்கள்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours