(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நாளாந்தம் வரும் நோயாளர்களுக்கு மாத்திரை வழங்குவதற்காக சம்மாந்துறை பிரதேச சபையினால் முதல் கட்டமாக ஒரு தொகுதி மாத்திரை பக்கெட்கள்  வைத்திய அத்தியட்சகரிடம் (11) இன்று காலை அன்பளிப்பு செய்யப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச சபை பதில் தவிசாளர் ஏ.அச்சி முஹம்மட் மற்றும் பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் ஆகியோர்களினால் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆசாத் எம்.ஹனீபாவிடம் ஒரு தொகுதி மாத்திரைப் பக்கெட்கள் கையளிக்கப்பட்டது.

இதில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.சரீபா, வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர் அப்துல் ஜப்பார், வைத்தியர்கள் மற்றும் தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இத்திட்டமானது முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷhட் அவர்கள் வைத்தியசாலை சென்றபோது வைத்தியசாலைக்கு நாளாந்தம் மருந்து எடுக்கவருகின்ற நோயாளிகளுக்கு கடதாசியில் மருந்து வழங்கப்படுவதை அவதானித்த தவிசாளரினால் சம்மாந்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் ஒரு லட்சம் மருந்துப் பக்கெட்களை பிரதேச சபையின் நிதியில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours