நூருள் ஹுதா உமர்.

 தேர்தல் வெற்றியை சிறப்பிக்கும் பொருட்டும், நாட்டின் ஜனாதிபதிக்கும் அண்மையில் பதவியேற்றுக் கொண்ட பிரதமருக்கும், நாட்டின் சபீட்சத்திற்காகவும் இறை அருள் வேண்டி சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலில் பிரார்த்தனை நிகழ்வொன்று நேற்று (10) மாலை நடைபெற்றது.

சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நிருவாகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இப்பிரார்த்தனை வைபவம் சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ்.வை.எம்.ஹனீபா  தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும், பொதுத்தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளருமான ஏ.எல்.எம்.சலீம், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள்  சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் செயலாளர் உட்பட நிருவாகிகள், ஊர் பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours