(காரைதீவு நிருபர் சகா)
வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா தீர்த்தோற்சவம் நேற்றுமுன்தினம்(4)செவ்வாய்க்கி
திருவோணம் காலை 9.15மணியளவில் நிறைவுறுவதால் அதற்கு முன்னதாக தீர்த்தம் ஆலயவண்ணக்கர் சுதுநிலமே திசாநாயக்க(சுதா) தலைமையில் ஆலயத்தின் கிழக்கேயுள்ள வங்காளவிரிகுடா சமுத்திரத்தில் வழமைபோன்று நடைபெற்றது.
தீர்த்தோற்சவத்தில் பங்கேற்பதற்காக நேற்றுமுன்தினமே நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தை சென்றடைந்தனர்..
கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா மஹோற்சவம் நேற்றுமுன்தினம் (4) செவ்வாய்க்கிழமை ஆலயதீர்த்தோற்சவத்துடன் நிறைவடைந்தது.ஆலயதிருவிழாசிறப் புப் பூஜைகளை ஆலயபிரதமகுருக்கள் சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் உதவியாக சிவஸ்ரீ க.கு.சீ.கோவர்த்தன சர்மா ஆகியோர் நடாத்திவந்தமை குறிப்பிடத்தக்கது.




Post A Comment:
0 comments so far,add yours