(காரைதீவு  நிருபர் சகா)

 சுமார் ஆறுமாத கால நீண்டவிடுமுறையின் பின்னர் இன்று 10ஆம் திகதி நாட்டிலுள்ள 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட சகலபாடசாலைகளும் ஒரேதடவையில் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

அதற்கான நடைமுறை ஒழுங்குவிதிகளை கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார்.

அதன்படி 200 பிள்ளைகளை விட குறைந்த எண்ணிக்கையுடைய பிள்ளைகள் பயிலும் சகல பாடசாலைகளும்  இன்று(10) முதல் திறக்கப்படும். அந்தப்பாடசாலைகளில் உள்ள சகல வகுப்புகளும் ஆரம்பமாகும்.

அதேவேளை 200 பிள்ளைகளைவிட கூடிய பிள்ளைகளைக்கொண்ட பாடசாலைகளில் தரம் 5இ10இ11இ12இ13 ஆகிய 5வகையான வகுப்புகளுக்கு எல்லா நாட்களும் பாடசாலை நடைபெறும்.

ஏனைய வகுப்புக்களுக்கு நாள்ரீதியில் வகுப்புகள்  நடைபெறும். அதாவது நாளொன்றுக்கு 7வகையான வகுப்புகள் நடைபெறும். அந்த வகுப்பு மாணவர்கள் மாத்திரமே சமுகமளிக்கவேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.

அதன்படி திங்கள் கிழமை  தரம் 1 மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்கவேண்டும்.
அதேபோன்று செவ்வாய்க்கிழமை -தரம் 2மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்கவேண்டும்.

புதன்கிழமை  தரம் 3மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்கவேண்டும்.

வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரம் 4மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்கவேண்டும்.

 
மேற்கூறபட்டவாறு பாடசாலைகள்  கட்டம் கட்டமாக ஆரம்பமாகும். அதாவது வாரத்தில் ஒருநாள் அல்லது இருநாள் மாத்திரம் பாடசாலைக்கு மாணவர்கள் சமுகமளிக்கும் வகையில் இவ்ஏற்பாட்டைச்செய்துள்ளது.
சமுகஇடைவெளி உளளிட்ட சுகாதார நடைமுறைகளைப் பேணும்வகையில் மிகவும் கவனமாக இக்காலஅட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. கொரோனா முற்றாக நாட்டைவிட்டு நீங்கியதும் காலப்போக்கில் வழமையான நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

நேரத்தைப்பொறுத்தவரை தரம் 10இ11இ12இ13 வகுப்புகளுக்கு காலை 7.30 முதல் மாலை 3.30 வரையும் ஏனைய வகுப்புகளுக்கு வழமையான நேரப்படியும் நடைபெறும்.
பி.ப. 1.30மணிக்கு முடிவடையும் வகுப்புகளுக்கு ஒரு இடைவேளை வழமைபோன்று இடம்பெறும். ஆனால் பி.ப. 3.30மணிக்கு முடிவடையும் வகுப்பு மாணவர்க்கு இரண்டு இடைவேளைகள் அதுவும் 20நிமிடத்திற்கு மேற்படாதவண்ணம் வழங்கப்படுதல் வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அனைத்து ஆசிரியர்களும் கடமைக்கு சமுகமளிக்கவேண்டும். கற்பித்தலுக்கு மேலதிகமாக மேற்பார்வை மதிப்பீடுகளை பரீட்சித்தல் சுகாதார மற்றும் ஒழுங்கு பேணல் கருமங்களிலும் பொறுப்புக்களை கையேற்கவேண்டும்.

பி.ப. 3.30மணிவரை  நேரசூசி உள்ள ஆசிரியர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து ஆசிரியர்களுக்குமான கடமைநேரம் மு.ப. 7.30மணி தொடக்கம் பி.ப.1.30மணிவரையுமாகும்.

கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் வழமைபோன்று கடமைக்காக சமுகமளிக்கவேண்டும்.
 
பாடசாலை மட்டக்கணிப்பீடுகள் மற்றும் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான முடிக்கப்படாத பரீட்சைகளைத் தவிர தவணைப்பரீட்சைகளையோ வேறு பரீட்சைகளையோ நடாத்தக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலை விளையாட்டுப்போட்டி தமிழ்மொழித்தினப்போட்டி ஆங்கிலதினப்போட்டி என பல புறக்கிருத்திய செயற்பாடுகள் பூரணமாகவே பாதிக்கப்பட்டுள்ளன.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours