(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)



மட்டக்களப்பு மாவட்டத்தில் மஞ்சந்தொடுவாயில் இயங்கிவருகின்ற அரசாங்க யுனானி ஆயர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் தற்போது பணியாற்றிவருகின்ற பொறுப்பு வைத்திய அதிகாரியின் அராஜகம் தொடர்பாக முறைப்பாடுகள் செய்யப்பட்டும் எந்தவிதமான தீர்வும் கிடைக்கவில்லை என பணியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.



யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் தற்போத பொறுப்பாக உள்ள வைத்தியர் வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற பெண் உத்தியோகத்தர்கள் உடை மாற்றுகின்ற அறைகளை திடிர் என திறந்து கொண்டு உள்ளே நுழைவதும் விடுதியில் தங்கியுள்ள நோயாளர்களுக்கு உணவு வழங்குவது தொடர்பிலும் ஊழல் செயல்பாட்டில் தொடர்ந்து செயல்பட்டுவருவது தொடர்பாக உத்தியோகத்தர்கள் கவனம் செலுத்தினால் அவர்களுக்கு எதிராக கடுமையாக செயல்ப்பட்டுவருகின்றார்.



இந்த வைத்திய சாலைக்கு வழங்கப்பட்டுள்ள வாகனத்தினை தனது சொந்தப்பாவனைக்காகவும் பாவித்துவருவது தொடர்பாகவும் தலைமை அதிகாரிகாளுக்கு தெரியப்படுத்தியும் எவ்விதமான நடவடிக்கையும் இல்லையாம்.



இவ்வைத்தியசாலையில் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பெண் உத்தியோகத்தர் வைத்திய பொறுப்பதிகாரியின் அடாவடித்தனத்தினால் வேலையை விட்டு நின்றுவிட்டார். இதற்கு அங்கு வேலைசெய்து வருகின்ற பெண் அபிவிருத்தி உத்தியயோகத்தர் இருவரும் அங்கு நடக்கின்ற விடையங்களுக்கு உடந்தையாக செயல்ப்பட்டு வருகின்றனர் அதைப்போன்று அங்குவேலைசெய்துவருகின்ற தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நிர்வாகத்தில் தலையிட்டு அங்கு அவர்களுடன் ஒத்துப்போகாதவர்களை வைத்திய அதிகாரியிடம் பொட்டுக்கொடுத்து வன்மம் சாதித்துவருகின்றனர்.



வைத்திய அதிகாரிதொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யவதற்கு அங்கு பணியாற்றும் பெண்வைத்தியரும் உதவியாளர் ஒருவரும் முறைப்பாடுசெய்வதற்கு சென்றபோது அங்கேயே அவர் சார்பாக முறைப்பாடு செய்யமுடியாது என்றும் திணைக்களத்தின் முறைப்பாடுகள் முடிவடைந்தபின்னர் பார்கலாம் என திருப்பிஅனுப்பபட்டனராம்.



வைத்திய சாலைக்கு வருகின்ற நோயாளிகளை முறையாக பராமரிப்பதில்லை எனவும் தமிழ் முஸ்லிம் என சாதிவேறுபாடுகளின் அடிப்படையில்த்தான் இந்த வைத்திய பொறுப்பதிகாரி தொடர்ச்சியாக செயல்பட்டு வருகின்றார். அங்குவேலை செய்கின்ற உத்தியோத்தர்களை எல்லாம் மிரட்டல் விடுத்து தனக்கு எதிராக எவராலும் நடவடிக்கை எடுக்கமுடியாது என தனது சொந்த நிறுவனம் என்ற தோரணையில் செயல்பட்டு வருகி;ன்றார் இவருக்கு உடணடியாக உரிய தண்டனையை வழங்க உரியவர்கள் நடவடிக்கை  எடுப்பார்களா. 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours