நடை பெற்று முடிந்த ஒன்பதாவது பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளின் பிரகாரம் திருகோணமலை மாவட்டத்தில் நால்வர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
இதில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இருவரும்,இலங்கை தமிழ் அரசு கட்சியில் ஒருவரும்,பொதுஜன பெரமுனவில் ஒருவரும் தெரிவாகியுள்ளார்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எம்.எஸ்.தௌபீக்(ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்), இம்ரான் மஹ்ரூப்(ஐக்கிய மக்கள் சக்தி) ஆகியோரும் இலங்கை தமிழ் அரசு கட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் அவர்களும் பொதுஜன பெரமுனவில் கபில அதுகோரலவும் தெரிவாகியுள்ளார்கள்.
திருகோணமலை மாவட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே,பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் ஆகியோர் தோல்வியடைந்துள்ளார்கள்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours