(துறைநீலாவணை நிருபர் )

கிழக்குமாகாணத்தில் தொல்பொருள் செயலணியை அமைத்து இதன் மூலம் தமிழ் மக்களின் முக்கியமான இடங்களை கபளீகரம் செய்வதற்கு பேரினவாத அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.  இவ்வாறான சம்பவங்களை பாராளுமன்றத்திற்குச் சென்று தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாத்திரமே இருக்கின்றதே தவிர வேறு எந்த சக்தியாலும் முடியாது என மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 6 ஆம் இலக்கத்தில் போட்டியிடும்  வேட்பாளர் மா.உதயகுமார் தெரிவித்தார்

துறைநீலாவணையில் சனிக்கிழமை மதியம் 01 ஆம் திகதி இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார.;

அவர் மேலும் பேசுகையில் எமது உரிமையினையும் தமிழ் மக்களினது கலை பண்பாடுகளையும் அழிப்பதற்காகவே இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக பல கட்சிகள் மட்டக்களப்பில் இறக்கப்பட்டு இருக்கின்றனர் இவர்களால் என்ன செய்யமுடியும் வெறுமனே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு என்ன செய்தது எனக்கேட்கின்றனர் அவ்வாறு கேட்பவர்களிடம் எவ்வித திட்டமும் இல்லை மக்களை ஏமாற்றப்போகின்றனர்.

தமிழ் மக்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது அதனைத் தட்டிக் கேட்கக்கூடிய ஒரே ஒரு கட்சியாக இருப்பது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத்தான் வேறு எந்தக் கட்சியும் அதனைப்பற்றிக் கதைக்கமுடியாத அளவிற்கு அரசாங்கம் வாய்ப்பூட்டுப் போட்டுவிடும்.

1956 ஆம் ஆண்டு அம்பாரை மாவட்டத்தில் கல்லோயாத் திட்டம் கொண்டுவரப்பட்டபோது தமிழ் மக்களினது நிலங்கள் பறிக்கப்பட்டன திருகோணமலையில் சேருவலத் தொகுதி கொண்டுவரப்பட்டன இவ்வாறு எங்களது நிலத்தொடர்பினை இல்லாமல் செய்து தமிழர்களது நிலங்கள் பறிக்கப்பட்டன இன்று தொல் பொருள் எனக் கூறி தமிழர்களது நிலங்கள் பறிக்கப்படுவதற்கு அதிக சந்தர்ப்பம் இருக்கின்றது

 இவ்வாறன சம்பவங்களை எதிர்த்துப் போராடக் கூடிய பலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாத்திரமே இருக்கின்றது இந்தக் கட்சியை எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் பலப்படுத்துகின்ற பொறுப்பு எமது தமிழ் மக்களின் கையில்தான் இருக்கின்றது 

இந்த நாட்டிலே 1950 ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச்சட்டம் இனவாதத்தினை உருவாக்கியதுடன் அதனை பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றி தமிழ் மொழிக்கான அங்கிகாரத்தினை இல்லாமல்செய்தார்கள் இவ்வாறு காலா காலமாக தமிழர்களுக்கான அனைத்து விடயங்களிலும் பேரினவாத அரசு பாரிய தவறுகளைச் செய்துவந்துள்ளது
இவ்வாறான நிலையில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களது பிரதிநிதித்துவத்தினைக் குறைப்பதற்காக பல கட்சிகளை களத்தில் இறக்கியுள்ளனர் இதனை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அமோக வெற்றியடையச் செய்யவேண்டும் என்றார்







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours