(க.விஜயரெத்தினம்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாட்டில் ஆட்சியமைந்ததன் பின்னரே முஸ்லிம்களுக்கு எதிராக எந்தவிதமான சம்பவங்களும் இடம்பெறவில்லையென ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று(31)நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் பஷீர் சேகுதாவூத் மேலும் தெரிவிக்கையில்...
1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் வந்தபோது ஈரோஸ் வடக்கு கிழக்கில் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தைத் தவிர போட்டியிட்டது.அதிலே நானும் போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டேன். அதன்போது ஒரு வருட காலத்தில் அந்த நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்து விட்டு அனைவரும் வெளியேறினோம்.பின்னர் கொழும்பிலே ஈரோஸ் தோழர்கள் பல பிரச்சனைகளை எதிர்நோக்கியபோது தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் வன்முறைகள் பரவலாக இடம்பெற்றபோது, இதன்போது இரு சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்வகையில் நான் மீள் பிரவசித்து அதற்குரிய அவ்வேலைத்திட்டங்களை மேற்கொண்டடேன்.
என்னைப்பொறுத்தவரையில் நான் எந்தவித போராட்ட இயக்கங்களையும் காட்டிக்கொடுத்தோ, தனி நபர்களையும், போராட்டங்களுக்குள்ளும் என்னை ஈடுபடுத்திக் கொள்ளாலமல் செயற்பட்டு வந்தேன் என்பதையிட்டு அகமகிழ்கின்றேன்.அதற்காக பெருமையடைகின்றேன். அந்த வகையில் இம்முறையும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற சிலருக்கும் இது இருக்கின்றது. இந்நிலையில்தான் நானும் இந்த தேர்தல் களத்தில் இறங்கியுள்ளேன்.
எமது ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு எனப்படும் எமது புதியக கட்சி ஊடகா தமிழ் முஸ்லிம் மக்களிடையே ஐக்கியம், சமாதானத்தையும் ஏற்படுத்தலாம் என நினைக்கின்றோம்.அதற்குரிய அரசியல் வேலைத்திட்டத்திலும் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.
நடைபெறவுள்ள தேர்தலின் பின்னர் அமையப்போகின்ற ஆட்சி என்றுமே இல்லாத ஒரு புதிய யுக்தியுடன் கொண்டு வருகின்றதொன்றாக காணப்படும் எனக் கருதுகின்றேன். அமையவிருக்கின்றன புதிய நாடாளுமன்றம் சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் ஒரு எழுச்சியகரமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.அந்த மாற்றம் பழைய முகங்கள், புதிய அரசியல் போக்கு புதிய யுக்தி, என்பன காணப்படும். எமது சிறுபான்மை அரசியலைப பொறுத்தவரையில் பழைய கொள்கை, பழைய அரசியல் முகங்கள், பழைய யுக்திதான் காணப்படும். இவை தமிழ் தேசிய அரசியல் பரப்பில் என்னைப் பொறுத்தவரையில் ஒரு ஆபத்தை விழைவிப்பதாக இல்லை எனக் கருதுகின்றேன். இதன்போது தமிழ் தேசிய அரசியல் பரம்பலை அடுத்த தலைமுறையினருக்குக் கையளிக்கின்ற நிகழ்வு இடம்பெறும்.
முஸ்லிம் தேசிய அரசியலைப் பெறுத்தவரையில் பழைய முகங்கள், கொள்கைகளையும், புதிய செயற்பாட்டு வடிவங்களையும், காணக்கூடியதாக தெரியவில்லை. ஆகவே முஸ்லிம் தேசிய அரசியல் என்பது கைவிடப்பட்டுப்போன ஒன்றாக அழிவுகளைனயும், சந்தித்துள்ளதாகத்தான் இதனைப் பார்க்கின்றேன். இவ்வாறு பார்க்கப்படுகின்ற மூன்று முக்கிய இனங்களிலும் மிகவும் பலவீனமான அரசியலாக முஸ்லிம் மக்களின் தேசிய அரசியல் காணப்படுகின்றது. இவ்வாறான காலகட்டதில் சிங்கள தேசிய அரசியல் மேலோங்கி நிற்கின்ற இக்காலகட்டத்தில தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் தேசிய அரசியல் செயற்பாடுகள் ஒற்றுமையுடன் முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இவ்வாறு இந்த இரு சிறுபான்மை இனங்களும் ஒற்றுமையுடனும் செயற்படாமல் போனால் எழுச்சிபெற்று வருகின்ற சிங்கள தேசிய அரசியலுக்கு நின்றுபிடிக்காமல் போகும் நிலமை ஏற்படும். தமிழர்களையும். முஸ்லிம்களுக்குள்ளும், குழறுபடிகளை ஏற்படுத்தி விட்டிருந்தார்கள். இக்காலலட்டத்தில் சிறுபான்மை மக்களைத் விட்டுவிட்டு வெறுமனே கதிரைகளைப் பிடிக்கின்ற போராட்டத்தில் ஈடுபடுகின்றமை ஏற்றுக்கொள்ள முடியாது.
இரண்டு சிறுபான்மை இனங்களும், தமிழாலும், கலைகளாலும் இணையவேண்டும். இதைத்தான் எமது மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களும் அப்போதே தெரிவித்திருந்தார். இதற்காக வேண்டித்தான் நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றேன். அதற்குரிய தகுதியும் எனக்கு உள்ளது.
தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் சரணாகதியையும், சண்டித்தனத்தையும் மேற்கொள்ள முடியாது. கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருந்த அசம்பாவிதங்களுக்காக நான் அரசாங்கத்திற்குள் இருந்து அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்துவந்தேன். தமிழ் முஸ்லிம் மக்களுக்குரிய தீர்வு நோக்கி நான் இந்த தேர்தலில் வென்றாலும்,தோற்றாலும் செயற்படுவேன். இதற்காகத்தான் நான் தமிழ் முஸ்லிம் மக்களின் ஆணையை இந்த தேர்தலில் வேண்டிநிற்கிற்றேன்.
எனக்கு தமிழ் மக்களுடைய அரசியலை நன்கு தெரியும். நான் 19 வயதிலிருந்து எனக்கு அரசியல் கற்றுத் தந்தது ஈரோஸ் என்ற தமிழ் அரசியல் கட்சிதான் ஆகும்.நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகள் அதிகளவில் இடம்பெற்றன.அதாவது நல்லாட்சியில் மிக கோரமான சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டன. மேலும் தமிழ்,முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புகள் ஒரு வீதம் கூட நிறைவேற்றப்படவில்லை.
ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியமைத்ததன் பின்னர் கடந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக எந்தவிதமான சம்பவங்களும் இடம்பெறவில்லை.ஆகவே தமிழ்- முஸ்லிம் மக்கள் கூட்டுப்பொறுப்புடன் இணைந்து செயற்படவேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours