இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (20.08.2020) வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இன்று காலை இடம்பெற்ற ஒன்பதாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் கலந்துக் கொண்டு பிரதமர் இவ்வாழ்த்தை தெரிவித்தார்.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட  அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்து அங்கு உரையாற்றிய பிரதமர், தென் மாகாணத்திலிருந்து உருவாகிய சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவுசெய்யப்பட்டமையை எண்ணி தான் பெருமையடைவதாக கூறினார்.

அமைச்சரவை அமைச்சராக நீண்ட அனுபவம் கொண்ட மஹிந்த யாப்பா அபேவர்தன, சிரேஷ்ட உறுப்பினர் என்ற வகையில் பாராளுமன்ற பாரம்பரியம் குறித்து சரியான புரிதல் கொண்டவர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

1983 மே 18ஆம் திகதி இடம்பெற்ற ஹக்மன ஆசனத்தின், இடைத்தேர்தல் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவான புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று முதல் நாட்டின் மூன்றாவது குடிமகனாக நியமிக்கப்படுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நினைவு கூர்ந்தார்.

புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு பாராளுமன்றத்தில் பாரபட்சமின்றி சுதந்திரமாக செயல்படுவதற்கான பலமும், தைரியமும் கிடைக்க வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.

பிரதமர் ஊடக பிரிவு
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours