(காரைதீவு  நிருபர் சகா)

 இந்தியா மற்றும் கனடா நாட்டின் பத்துக் கவிஞர்கள் இணையவெளியில் பங்கேற்கும் இணையவழி பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு நாளை(22)சனிக்கிழமை நடைபெறுகிறது.

கொரோனா காரணமாக வான்வெளிப்பயணங்கள் தடைபட்டிருப்பதால் இணையவெளியில் இக்கவியரங்கை நடாத்த கனடா எழுத்தாளர் அகில் சாம்பசிவம் முயற்சியெடுத்துள்ளார்.

கனடாவில் வாழும் காரைதீவைச்சேர்ந்த பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் தலைமையில் நடைபெறும் இக்கவியரங்கை இலக்கியவெளி காலாண்டு இலக்கியசஞ்சிகையும் தமிழ் ஆதர்ஸ்.கொம்மும் இணைந்து நடாத்துகிறது.

ந்திய இலங்கை நேரப்படி சனிக்கிழமை(22) மாலை 7மணிக்கும் கனடாவில் காலை 9.30மணிக்கும் இக்கவியரங்கை நெறிப்படுத்தும் கனடா எழுத்தாளர் அகில் சாம்பசிவத்தின் யுரியூப் முகநூல் சூம் வழிகளில் நேரலையாகப் பார்க்கமுடியும்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours