இந்த வருடத்தின் இறுதி மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அந்த இடைக்கால கணக்கறிக்கையை சமர்பிக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல தெரிவித்தார். எதிர்வரும் மாதங்களுக்கான அரச செலவீனத்தை கருத்தில் கொண்டு இந்த இடைக்கால கணக்கறிக்கை முன்வைக்கப்படவுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்பிக்கப்படவுள்ளது. இன்றைய தினம் சமர்பிக்கப்படவுள்ள இடைக்கால கணக்கறிக்கை தொடர்பில் நேற்று(19) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் அமைச்சரவை பேச்சாளர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

"சபாநாயகர் தெரிவுக்கு பின்னர் நிதி அமைச்சரால் இடைக்கால கணக்கறிக்கை சமர்பிக்கப்படவுள்ளது. அதேபோல் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்பிக்கப்படும். இடைக்கால கணக்கறிக்கையில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை நிதி அமைச்சரின் உரையின் பின்னரே தெரிந்துக்கொள்ள முடியும்" என்றார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours