காரைதீவு சகா

திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன் (நிரந்தரமாக) நேற்று மீண்டும் கடமையினை பொறுப்பேற்றார்.
நேற்று கல்விப்பணிமனைக்குச் சென்ற அவருக்கு சக உத்தியோகத்தர்கள் ஊழியர்களால் அங்கு ஆரத்திஎடுத்து மாலைசூட்டி பெருவரவேற்பளிக்கப்பட்டது.
8 தமிழ் வலயங்களுக்கான கல்விப்பணிப்பாளரை தேர்ந்தெடுக்கும் நேர்முகத்தேர்வானது கடந்த 2020.07.10 கிழக்குமாகாண கல்வியமைச்சில் இடம்பெற்றது.
இதன் போது திருக்கோவில் வலயக்கல்வி பணிமனைக்கு கல்விப்பணிப்பாளராக திரு.யோ.ஜெயச்சந்திரன் (இ.க.நி.சேவை II) தெரிவுசெய்யப்பட்டு நேற்று தனது கடமையினை பொறுப்பேற்றார்.




Post A Comment:
0 comments so far,add yours