மட்/பட்/மண்டூர் - 37 நவகிரி வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றிய அதிபர் கனகரெத்தினம் - சாந்தலிங்கம் 32 வருட கால கல்விப் பணியில் 16.09.2020 ஆம் திகதி ஓய்வு பெறுகின்றார்.
த.தவக்குமார்)
பழம்பெரும் பதியாம் திருப்பழுகாமத்தினைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு.கனகரெத்தினம் - சாந்தலிங்கம் அவர்கள் மட்ஃபட்ஃதிருப்பழுகாமம் விபுலாநந்தா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியினைக் கற்றார். இடைநிலைக் கல்வியினை மட்/பட்/பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியினை மட்ஃமட்ஃசிவாநந்தா மகா வித்தியாலயத்திலும் கற்றார் உயர் கல்வியில் விஞ்ஞானத் துறையினைத் தெரிவு செய்து அத்துறையில் சிறந்த பெறுபேற்றினையும் பெற்றிருந்தார். இந் நிலையில் இவருக்கு ஆசிரியப் பணியில் இணைந்து சேவையாற்ற சந்தரப்பம் கிடைத்ததது. இந்த வகையில் 1988 இல் முதல் நியமனத்தைப் பெற்ற இவர் மட்ஃபட்ஃகளுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயத்தில் ஆசிரியராக நியமிக்கப்பட்டு கடமையாற்றினார். விஞ்ஞான பாடத்தினை மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக் தேர்ச்சியடைய வேண்டும் எனும் நோக்கில் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் 1990 ஃ 1991 காலப்பகுதியில் விஞ்ஞான பாடத்தில் பயிற்சியினைப் பெற்று பயிற்சி பெற்ற விஞ்ஞான ஆசிரியராக தான் கல்வி கற்ற பாடசாலையில் விஞ்ஞானம் கற்பிப்பதற்காக நியமிக்கப்பட்டார். மாணவர்களை உளவியல் ரீதியாயகவும் அறிவு ரீதியாகவும் இனங்கண்டு தனித்தனியாக மாணவர்களை அணுகி விஞ்ஞான பாடத்தில் மாணவர்கள் சிறந்த அடைவினைப் பெற உழைத்தார்.
பின்னர் மட்/பட்/தம்பலவத்தை கணேச வித்தியாலயம் மட்/பட்/மண்டூர் இராமகிருஸ்ண வித்தியாயலயம் போன்ற பாடசாலைகளில் விஞ்ஞான பாடத்தினைக் கற்பித்து பாடத்தின் அடைவு மட்டத்தினை உயர்த்தினார். இவ்வாறு உன்னத பணியினை ஆற்றிக் கொண்டிருக்கும் வேளையில் மட்ஃபட்ஃமண்டூர் - 37 நவகிரி வித்தியாயலத்தில் கடமையாற்றிய அதிபர் ஓய்வு பெற்றுச் செல்ல அவ்விடத்திற்கு அதிபர் பணியினை மேற்கொள்ளப் பணிக்கப்பட்டார். இப் பாடசாலை தரம் 1 தொடக்கம் 5 வரையான ஆரம்பப் பாடசாலையாக மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் வளப்பற்றாக்குறையுடன் காணப்பட்ட போதும் கிடைக்கும் வளத்தினைப் பயன்படுத்தி மாணவர்களின் கல்வியினை எந்த தடையும் இன்றி முறையான திட்டமிடலுடன் முன் கொண்டு சென்றார்.
விசேடமாக இவர் மட்/பட்/மண்டூர் - 37 நவகிரி வித்தியாயலத்தில் அதிபராக கடமையைப் பொறுப்பேற்கும் போது ஒரு கட்டிடத்துடன் ஆரம்ப தரங்களைக் கொண்ட பாடசாலையாகவே காணப்பட்டது. இந் நிலையினை மாற்றியமைக்கும் நோக்கில் பாடசாலையினை தரமுயர்த்துவற்காக உழைத்தார். இவரின் உழைப்பின் பயனாக தற்போது இப்பாடசாலை தரம் 1 தொடக்கம் தரம் 11 வரையான வகுப்புகளைக் கொண்ட ஒரு பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது. அத்துடன் சிறுவர் விளையாட்டுப் போட்டியில் தேசிய மட்டம் வரை மாணவர்கள் பங்குபற்றுவதற்கும் காரணமாக இருந்தார்.
இது தவிர பாடசாலைகளில் இடம்பெறும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் முன்னின்று உழைத்தார். இவரிடம் ஒப்படைக்கப்படும் எந்தவொரு வேலையினையும் நேர்தியாகவும் விரைவாகவும் முடிக்கும் ஆற்றல் கொண்டவராகக் காணப்பட்டதினால் வலய கோட்ட மட்டத்திலும் ஆசிரியர்கள் மாணவர்கள் போன்றோரிடமும் நன்மதிப்பினை பெற்றவராக திகழ்ந்து அரச பணியில் ஓய்வு பெறுகின்றார்.

Post A Comment:
0 comments so far,add yours