எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனில் ஆண்கள் தங்கி கற்றல் நடவடிக்கை மற்றும் தியானம் மேற்கொள்ளும் புதிய கட்டிடம் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஸ்ரீமத் சுவாமி ராஜேஷ்வரானந்த மஹராஜ் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா ஆகியோரினால் இன்று (18) திறந்து வைக்கப்பட்டது.
இங்கு கல்வி பயிலும் கல்விப் பொதுத்தராதர சாதாரன தர மற்றும் உயர்தர மாணவர்கள் தங்கியிருந்து கல்வி நடவடிக்கையினை மேற்கொள்வதறகான வசதியனை மேமபடுத்தும் நோக்கிலேயே இப்புதிய மண்டபம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
கல்லடி ஸ்ரீ ராமகிருஷ்ண மிசனின் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தர் தலைமையில் இடம்பெற்ற இன்றைய நிகழ்வின்போது விசேட ஹோமம் பூசையும் நடைபெற்றதுடன் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவிற்கு கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஸ்ரீமத் சுவாமி ராஜேஷ்வரானந்த மஹராஜ் அவர்களின் திருக்கரங்களினால் விசேட நினைவுப் பரிசு வழங்கி வைக்கப்பட்து. மேலும் இக்கட்டிடப் பணியில் ஈடுபட்ட பொறியிலாளர், மேற்பார்வையாளர், தொழிநுட்பவியலாளர்கள், பணியாளர்கள் பலருக்கும் சிறப்புப் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours