(காரைதீவு   சகா)

இராமகிருஸ்ணமிசனின் மட்டு.மாநில கல்லடி ஆஸ்ரமத்தில்  புதிதாக கட்டப்பட்டு வரும் சமையல் கூடம் மற்றும் 'சிவானந்த பவன்' என்னும் ஓஎல் ஏஎல் மாணவர்கள் தங்கும் விடுதியும் நாளை  18ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட இருக்கின்றது.

அதிதிகளாக கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி    ஸ்ரீமத் சுவாமி ராஜேஷ்வரானந்த மஹராஜ்  மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

நாளை காலை  8 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படும் வைபவங்களை தொடர்ந்து  மாணவர்கள் இல்ல கட்டிடமாகிய சிவானந்த பவனில் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு ஹோமமும் பூஜையும் ஆராதனையும் நடைபெறும் என  மட்டு.ஆஸ்ரம துணைமேலாளர் ஸ்ரீமத்  சுவாமி நீலமாதவானந்தர் தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours