த.தவக்குமார்
மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் ஏறாவூர்பற்று பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளர் ந.வில்வரத்னம் அவர்களின் தலைமையில் மட்டு முயற்சியாண்மை பிரதேச மட்ட கண்காட்சி 1 இன்று(17) ஏறாவூர்பற்று பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.
இக் கண்காட்சி சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்தித் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் சந்தை வாய்பினை ஏற்படுத்தி கொடுப்பதன் நோக்கமாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் மாவட்ட மேற்பார்வை உத்தியோகத்தர் திரு. எஸ்.வினோத் ஏறாவூர்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்.திருமதி. ஜீ.பவதாரிணி உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு. ஏ.கருணாகரன் கணக்காளர் திருமதி.ஏ.டிலானிஇநிர்வாக உத்தியோகத்தர் செல்விகஸ்ரீஎன்.கோமதி நிர்வாக கிராம உத்தியோகத்தர் ரி.லிங்கேஸ்வரன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.








Post A Comment:
0 comments so far,add yours