த.தவக்குமார்
ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த மேனுஜன் சலோமியா (19) என்பவர் தீப்பெட்டி கொண்டு அடுப்பை பற்ற வைக்கஇ முயற்சிக்கையில் திடீரென ஆடையில் தீப்பிடித்த நிலையில் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்
பதிவுத்திருமணம் செய்து கொண்டு தளவாயில் வசித்து வந்த இவர்கள்இ கடந்த ஒரு மாதமாக குமாரவேலியார் கிராமம்இ செங்கலடியில் வாடகைக்கு வீடொன்றைப் பெற்று வசித்து வந்திருக்கிறார்கள்.
இந்த யுவதியின் தந்தை சவூதி அரேபியாவில் தொழில் செய்து வருகிறார். சென்ற 11-09-2020 வெள்ளிக்கிழமைஇ சமையலரையில் வேலை செய்து கொண்டிருக்கும் போதுஇ தவறுதலாக இவர் மேல் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டதால்இ ஆடைகளும் ஈரமாகியுள்ளது.
அதனைப்பெரிது படுத்தாது வேலைகளைத் தொடர்ந்ததும் இ ஆடைகளை மாற்றி வேறு ஆடை உடுத்திட்டு வா என யுவதியின் கணவர் சொன்ன போதுஇ தேவையில்லை. ஈரம் காய்ந்து விட்டது. அவசரமாக சமைத்து முடிப்போம் என தீப்பெட்டி கொண்டு அடுப்பை பற்ற வைக்கஇ முயற்சிக்கையில் திடீரென ஆடையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில்இ செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுஇ மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில்இ நேற்று மாலை மரணமானார்.
தீக்காயங்ளுக்குள்ளான நிலையில் பெற்றோரைச் சந்திக்க வேண்டுமென்றும்இ அவர்களிடம் மன்னிப்புக்கேட்க வேண்டுமென்றும்இ தகவல் கிடைத்துஇ வைத்தியசாலைக்குச் சென்ற தாயிடம் மன்னிப்புக்கேட்டதோடுஇ சவூதியிலிருக்கும் தந்தையிடம் மூலம் நேரடியாகத் தொடர்பு கொண்டு மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.
இறுதியில் தாயின் அருகாமையில் தான் உயிர் பிரிந்துள்ளார்.
நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக ஏறாவூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Post A Comment:
0 comments so far,add yours