எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு  

 
அம்கோர் தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு கே. கருணாகரன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க  மட்டக்களப்பு மாவட்டத்தில்  கொரோனா தொற்றுக்குள்ளான குடும்பங்கள் மற்றும் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட குடும்பங்கள் என  தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுமார் 50 குடும்பங்களுக்கான இரண்டு வார காலத்திற்கான  உலர் உணவு பொதிகளை  இன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் வழங்கியது.

இவ்வுணவுப் பொதிகள் கோரளைப்பற்று மத்தி மற்றும் கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தனிப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படுவதற்காக பிரதேச செயலாளர்களிடம் இன்றைய தினமே மாவட்ட செயலகத்தினால் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரீகாந்த் சுதர்ஷினி மாவட்ட திட்ட பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி அம்கோர் நிறுவனத்தின் ஸ்தாபகரும் நிறைவேற்று பணிப்பாளருமான திரு ப முரளிதரன் சிரேஷ்ட நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் திரு யோ சிவயோகராஜன் மற்றும்  நிறுவன உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நாடு தழுவிய கொரோனா ஊரடங்கின் போதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ரூபா  8.97 மில்லியன் பெறுமதியான 8616 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் அம்கோர் நிறுவனத்தினால் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours