(த.தவக்குமார்)
பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சரின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புச் செயலாளராக பிரதேச செயலக வீதி செங்கலடியினைச் சேர்ந்த இரத்தினசிங்கம் லலீந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனக்கடிதத்தினை பருந்தோட்ட இராஜாங்க அமைச்சின் அலுவலகத்தில் பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் அருத்திக பெர்ணாண்டோ அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
இரத்தினசிங்கம் லலீந்திரன் அவர்கள் பேராதனை பல்கலைகழத்தில் வீ.ஏ பட்டத்தினை பெற்றதுடன் கல்வி டிப்ளோமா,கல்வி முதுமானி பட்டங்களை முடித்தவர்.அத்தோடு அகில இலங்கை சமாதான நீதவான், மனித உரிமை ஆணைக்குளழுவின் முன்னாள் கிழக்கு மாகாண பணிப்பாளராகவும் சேவையாற்றியவர்.
தனக்கு கிடைக்கப்பெற்ற இந்த பதவியினூடாக எதிர்காலத்தில் மக்களின் தேவையறிந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அபிவிருத்தி பணிகளை முன்னேடுக்கவிருப்பதாக அவர் தெரிவித்தார்.



Post A Comment:
0 comments so far,add yours