சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் அமைப்பினால் அண்மையில் வெளியிடப்பட்ட முதலுதவிக் கையேடு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கருணாகரனிற்கு  (23) மாவட்ட செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

இவ்வமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் சமுக செயற்பாட்டாளருமான தேசமான்ய அல்ஹாஜ். ஏ.எல்.எம். மீராசாகிபினால் முதலுதவிக் கையேடு அரசாங்க அதிபருக்கு வழங்கிவைக்கப்பட்டது.

இக்கையேட்டில் வீதிகளில் ஏற்படுகின்ற விபத்துக்கள், வீடுகளில் சமயலறை எரிவாயுக் கசிவு விபத்துக்கள், நீரில் மூழ்கி ஏற்படும் விபத்துக்கள், மாரடைப்பு மற்றும் பாம்புக்கடி போன்ற விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளவேண்டிய முதலுதவிகள் தொடர்பான வழிகாட்டல் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours