கல்முனை வடக்கு ப.நோ.கூட்டுறவு சங்கத்தில் கூட்டுறவு கிராமிய வங்கி கடன் வழங்கும் நிகழ்வு சங்கத்தலைவர் எஸ். அரசரெத்தினம் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் பதிவாளருமான எம்.சி.எம். செரீப், கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கலாதேவி உதயராஜா, தலைமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.ஐ.எம். பரீட், ஏ.எம்.ஷாபி, கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஜாபீர் மற்றும் இயக்குனர் சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் கிராமிய வங்கிக்கடன்களுக்கான காசோலைகள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் பதிவாளருமான எம்.சி.எம். செரீப், கல்முனை வடக்கு ப.நோ கூட்டுறவு சங்க நிருவாகம் அவரது சேவையை பாராட்டி கௌரவித்திருந்தனர்.
(காரைதீவு நிருபர் சகா)
(காரைதீவு நிருபர் சகா)

Post A Comment:
0 comments so far,add yours