த.தவக்குமார்


காத்தாங்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலூர்,கல்லடி பிரதேசத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான சித்திரவேல் சிவகுமார் (37) என்பவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று(22) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் தனது வீட்டில் அனைவரும் நித்திரை செய்த பின்னர் வீட்டின் அறையினுள் தனக்குத்தானே தூக்கிட்டு தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டார் காலையில் கண்டுள்ளனர்.இவருக்கு கடன் தொல்லை காரணமாவே தூக்கிட்டார் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பொலிஸ் பொறுப்பதிகாரி க.யோகானந்தன் அவர்களின் அறிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாகவும் சம்பவ இடத்திற்கு சென்ற காத்தாங்குடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி வேலு-மணிமாறன் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை காத்தாங்குடி பொலிஸாhர் மேற்கொண்டு வருகின்றனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours