நூருல் ஹுதா உமர்

கோவிட் - 19 பரிசோதனைக்கு ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி எனவும் இன்று அக்கரைப்பற்று நகர பிரிவு -1 ல் இடம்பெற்ற எழுமாறான பரிசோதனைகளுக்கு ஆர்வமாய் வந்து கலந்துகொண்டு, சுகாதார துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கிய எனது வட்டார நகர் பிரிவு - 1 மக்களுக்கு தனிப்பட்ட ரீதியில் எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன் என அக்கரைப்பற்று .மாநகர சபை முதல்வர் அதாவுல்லா அகமட் ஸகி தெரிவித்துள்ளார்.

தாமாக முன்வந்து கோவிட் - 19 பரிசோதனையை தனக்கு செய்துகொண்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் விமர்சகர்கள் கூறுவது போல் பரிசோதனை என்பது ஒரு கஷ்டமான விடயமல்ல. அது மிகவும் இலகுவானதே என்பதை விளங்கி இருந்தாலும் இன்று அதை நானும் அனுபவரீதியாக அறிந்து கொண்டேன்.

இதே போல் ஏனைய பிரதேச மக்களும் பரிசோதனைகளுக்கு ஆர்வத்துடன் கலந்துகொண்டு எமது மாநகரை முழுமையாக விடுவிக்க உதவ வேண்டும் என கேட்கிறேன். என்பதுடன் இன்றைய நிகழ்விற்கு என்னோடு துணையாக இருந்த எனது வட்டார குழு  உறுப்பினர்களுக்கும், சுகாதார துறையினருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours