(வவுணதீவு எஸ்.சதீஸ் )
மட்டக்களப்பு நகரின் மேற்கே, உன்னிச்சை 6ம் கட்டை கிராமத்தில் அண்மையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித அந்தோனியார் ஆலயத்தின் முதலாவது அங்குரார்ப்பண திருப்பலி பூசை ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றது.
ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா ஆலயம், உன்னிச்சை அந்தோனியார் ஆலயங்களின் பங்குத் தந்தை அன்ரனி டிலிமா அவர்களின் ஒழுங்கமைப்புக்கமைவாக, மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைையில் இன்றைய முதலாவது திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இத் திருப்பலிப் பூசைகளில் சுகாதார நடைமுறைகளுக்கமைவாக மக்கள் கலந்துகொண்டனர்.
இவ் அந்தோனியார் ஆலயம் கடந்த சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் இந்து கிறிஸ்தவ மக்கள் மத வேறுபாடின்றி வழிபட்டு வந்த நிலையில் கடந்த 1990ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையால் முற்றாக உடைத்து சேதமடைந்தது.



Post A Comment:
0 comments so far,add yours