(மண்டூர் மேலதிக நிருபர்)
மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி அலுவலகம் நீணடகாலங்களாக முழுமையான முறையில் திருத்தியமைக்கப்படாமல் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

வைத்தியசாலை வளாகத்தில் தனியாக இயங்கி வரும் இக்கட்டடமானது சட்டவைத்திய அதிகாரிகள்,மரண விசாரணை அதிகாரிகள்,பொலிஸார் தங்களின் விசாரணைகளை மேற்கொள்வதற்காகவும் மருத்துவ பீடமாணவர்கள் தங்களின் கற்கைநெறிகளை பல சிரமங்களுக்கு மத்தியில் இந்த சட்டவைத்திய அலுவலகத்திலிருந்து மேற்கொண்டு வருகின்றனர்.

நீண்டகாலங்களுக்கு முன்னர் இந்த புதிய கட்டடம் அமைக்கப்பட்டிருந்த போதிலும் முழுமையான முறையில் பூர்த்தி செய்யப்படாமல் காணப்படும் நிலையில் தற்போது பெய்து வரும் பருவகால மழையினால் மழைநீர் உட்செல்வதனால் அங்கு கடைமையில் உள்ளவர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் அத்தோடு இக்கட்டிடத்திற்கு வழங்ப்பட்டுள்ள மின்சாரம் இடையிடையே துண்டிக்கப்படுவதகவும் தெரியவந்துள்ளது.

எனவே உரிய அதிகாரிகள் இக்கட்டிடத்தின் குறைபாடுகளை உடன் கண்டறிந்து இக்கட்டிடத்தில் இருந்து அதிகாரிகள் தங்களின் கடமைகளை சிரமம் இல்லாமல் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கும் படி தெரிவித்துள்ளனர்




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours