த.தவக்குமார்
போரதீவுபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட நீர்ப்பாசண திணைக்களத்திற்குரிய தம்பலவத்தை ஊற்றுக்கேணி வீதி புனரமைக்கப்படாது மிக நீண்டகாலங்களாக சேதமடைந்து காணப்பட்ட நிலையில்

அண்மையில் அம்பாறை நீர்ப்பாசணத்திணைக்களத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தக்காரகளுக்கு இவ்வேலைத்திட்டம் வழங்கப்பட்டு புனரமைப்பபு வேலைகள் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் நடைபெற்று வரும் திருத்தவேலைகள் சரியான முறையில் நடைபெறவில்லையென பிரதேச வாசிகள் சுட்டிக்கபட்டியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவமழையினால் ஒப்பந்தக்காரர்களினால் மேற்கொள்ளப்பட்ட வேலைகள் மழை நீரினால் அடித்துச்செல்லப்பட்டது.தற்போது மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை உடன் நிறுத்தி சரியான முறையில் இந்த வேலைகளை உரிய அதிகாரிகளின் மேற்பார்வையில் மேற்கொள்ளுமாறு பிரதேச வாசிகள் வேண்டுகின்றனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours