எதிர்வரும், ஜனவரி மாதம் 11ம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர ஏனைய பகுதிகளிலுள்ள ஆரம்ப பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் அதே தினத்தில் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மீளவும் பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்? கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்
நாடளாவிய ரீதியில் கொவிட் தொற்றை அடுத்து மூடப்பட்ட பாடசாலைகளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி திறப்பற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பன்னிபிட்டிய ஸ்ரீதர்ம விஜயாலோக விஹாரைக்கு சென்ற அவர் வழிபாடுகளில் ஈடுபட்டதை அடுத்து , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களின் கல்விக்கான உரிமையை பாதுகாப்பதற்காக, பாடசாலைகள் இயலுமான வரை திறக்க முயற்சி எடுக்கப்படும்.
நாடு பூராகவும் ஒரே நேரத்தில் பாடசாலைகளை திறப்பதற்கான சாத்தியம் கிடையாது.
எனினும், எந்தெந்த மாவட்டங்களில் பாடசாலைகளை திறக்க முடியுமோ, அந்த மாவட்டங்களில் பாடசாலைகள் சுகாதார வழிகாட்டலின் கீழ் திறக்கப்படும்.

Post A Comment:
0 comments so far,add yours