கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைகழக வளாகத்தின் பின்னால் உள்ள காட்டுப் பகுதி வாய்க்கால் ஒன்றில் இருந்து ஆயுதங்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் மீட்கப்பட்டுள்ளன.

அறிவியல் நகர் பகுதியில் வாழும் கிராம மக்களினால் வழங்கப்பட்ட தகவலையடுத்து ரீ 56 ரக துவக்குகள் 5, ரீ 56 மகேஷின் 1, ரீ 56 ரவைகள் 30 என பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் மீட்கப்பட்டு கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் விடுதலைப்புலிகளினால் இறுதி யுத்தத்தின் போது வாய்க்காலில் வீசி எறியப்பட்டனவாக இருக்கலாம் என விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றார்கள்.



Share To:

Post A Comment:

0 comments so far,add yours