(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

மட்டக்களப்பு  மாவட்டத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான   கலாசார பொங்கல் விழா நிகழ்வுகள்  தற்போது மாவட்டத்தில்  ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக  பொதுமக்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் பிரதேச செயலகங்கள் மட்டத்தில் நிகழ்வுகள்  நடாத்தப்பட்டு வருகின்றன

மட்டக்களப்பு  மண்முனை  வடக்கு   பிரதேச செயலகத்தின் பொங்கல் விழா நிகழ்வுகள் பிரதேச செயலக கலாசார  பிரிவுடன் மட்டக்களப்பு   சத்துருக்கொண்டான் ஸ்ரீ ஆலயடி பிள்ளையார்   ஆலய  நிர்வாகத்தினர்    இணைந்து  சத்துருக்கொண்டான் ஸ்ரீ ஆலயடி பிள்ளையார்   ஆலயத்தில்  இன்று நடைபெற்றது .

உதவி  பிரதேச செயளாளர்  ஜி .அருணன் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்வில் மண்முனை  வடக்கு  பிரதேச செயலக  கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , சத்துருக்கொண்டான் ஸ்ரீ ஆலயடி பிள்ளையார்   ஆலய நிர்வாக உறுப்பினர்கள்  கலந்துகொண்டார்

நடைபெற்ற  கலாசார பொங்கல் விழா  நிகழ்வானது   பாரம்பரிய கலாசாரத்தை முன்னிலைப்படுத்தி   ஆலய பிரதம குரு  சிவஸ்ரீ  பா .செ . சிறிஸ்கந்தராசக் குருக்கள்  தலைமையில்  ஆலய முன்றலில் பொங்கல் பொங்கப்பட்டு சூரியனுக்கு நன்றி செலுத்தி  ஆலயத்தில் விசேட தீபாராதனை பூஜை வழிபாடுகள்  நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours