நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேசத்தின் மாளிகைக்காடு கடற்கரை முழுவதிலும் வெள்ளை கொடிகளை பறக்கவிட்டு மீனவர்கள் துக்க தினத்தை இன்று அனுஷ்டித்தனர். ஹம்பாந்தோட்டை பிரதேசத்திற்கு மீன் வியாபாரம் தொடர்பில் சென்றிருந்த இரு மீனவர்கள் மிகுதி மீன்களை நீர்கொழும்பு பிரதேசத்தை நோக்கி விற்பனைக்காக கொண்டு சென்ற போது காலிப்பிரதேசத்தில் வைத்து மீன்களை ஏற்றிச்சென்ற குளிரூட்டி வாகனமும் சீமெந்து பக்கட்டுக்களை ஏற்றிவந்த லொறியும் நேற்று மதியம் மோதியதில் விபத்து நடந்துள்ளது.

இந்த விபத்தில் சிக்கி வாகன உரிமையாளர் சம்பவ இடத்திலையே காலமானதாகவும், வாகன சாரதி பலத்த காயங்களுடன் காலி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் குடும்பத்தினர் சம்பவம் தொடர்பில் தெரிவித்தனர். மேலும் மரணித்தவரின் ஜனாஸாவை ஊருக்கு எடுத்துவந்து நல்லடக்கம் செய்யும் நடவடிக்கையில் குடும்பத்தினரும், மீனவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கோரவிபத்தினால் மாளிகைக்காடு பிரதேச மக்களிடையே சோகம் நிலவி வரும் இந்த சூழ்நிலையில் மீனவர்களும் தமது வியாபார நிலையங்களிலும், கடற்கரை பிரதேசங்களிலும் வெள்ளைக்கொடிகளை பறக்கவிட்டு துக்கம் அனுஷ்டித்து வருகிறார்கள்



.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours