கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாகிஸ்தான் பிரதமர் கௌரவ இம்ரான் கான் அவர்களுடன் இன்று (2021.02.24) முற்பகல் கொழும்பில் இடம்பெற்ற 'வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில்' பங்கேற்றார்.
இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற இம்மாநாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கௌரவ பிரதமர்கள் இருவரும் நேற்றைய தினம் (23) அலரி மாளிகையில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போதும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது குறித்து அதிக கவனம் செலுத்தியிருந்தனர்.








Post A Comment:
0 comments so far,add yours