(வி.ரி.சகாதேவராஜா)


வரலாற்றுப்பிரசித்திபெற்ற மாட்டுப்பளை மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று ஆலயத்தில் நடைபெற்றது.

ஆலயத்தலைவர் கோ.கமலநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆலயநிருவாகசபையினர் ஆலோசகர்கள் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.

பிரபல இந்துகுருவான சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்களின் தலைமையிலான குழுவினர் கும்பாபிசேகத்தை செய்வதுஎன்றும் சித்திரைமாத இறுதிப்பகுதியில் இதனை நடாத்துவதென்றும் முடிவானது.

எதற்கும் அம்பாறை மாவட்டத்தின் இந்துக்கள்வாழ்கின்ற சகலகிராமங்களைச்சேர்ந்த பிரமுகர்களையும் அழைத்து மிகவிரைவில் பொதுக்கூட்டமொன்றை நடாத்துவதென்றும் அதில் மகாகும்பாபிசேகக்குழு மற்றும் உபகுழுக்களைத் தெரிவுசெய்வதென்றும் முடிவானது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours