(காரைதீவு   சகா)

நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் 1ஆம்ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்பவிழா நேற்று அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

பிரதமஅதிதியாக பாடசாலை மேம்பாட்டுநிகழ்ச்சித்திட்ட இணைப்பாளரும் உதவிக்கல்விப்பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றிவைத்து சிறப்புரையாற்றி சிறப்பித்தார்.

கௌரவஅதிதியாக இலங்கைவங்கியின் நாவிதன்வெளிக்கிளை முகாமையாளர் கே.சசிதரன் கலந்துசிறப்பித்தார்.

முன்னதாக புதியமாணவர்கள் பழையமாணவர்களால் மாலைசூட்டப்பட்டு மாஸ்க் அணிவிக்கப்பட்டு பேஸ்ஷீல்ட் அணிவிக்கப்பட்டு உண்டியல் வழங்கப்பட்டு வர்ணகுடையும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
விவசாய இராஜாங்க அமைச்சின் திட்டத்திற்கமைய 1ஆம் வருட மாணவர்க்கு மரக்கன்று விநியோகம் செய்யப்பட்டது.

பின்னர் பாடசாலையின்ஒன்றுகூடல் மண்டபத்தில் சுகாதாரநடைமுறைப்படி வரவேற்பு நிகழ்வும் நடைபெற்றது. அவ்வமயம் தரம் 5புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 07மாணவர்கள்; பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours