(த.தவக்குமார்)

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி முத்துமாரியம்மன் ஆலத்தின் முன்னுள்ள கலையரங்கில் அடையாளம் காணப்படாத எண்பது வயது மதிக்கதக்க ஆண் ஓருவரின் சடலம் ஒன்று நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி கே.ஜீவராணி அவர்கள் சடலத்ததை பார்வையிட்ட பின்னர் சம்பவம் பற்றிய வசாரணைகளை முன்னெடுக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்

உறவினர்கள் முன்வந்து சடலத்தை அடையாளம் காட்டும் வரை 14 நாட்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் பரேதம் வைக்கப்பட்டுள்ளதுடன் இதற்கமைவாக பிரேதத்தை அடையாளம் காட்ட உதவுமாறு வெல்லாவெளி பொலிஸார் கோருகிக்றனர்.





 

Share To:

Post A Comment:

0 comments so far,add yours