செட்டியாளயத்தில் சம்பவம்
(த.தவக்குமார்)
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டிபாளையம் பிரதேசத்தில் தூக்கிட்ட நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
26 வயதுடைய செனஸ்சங்கரி என்ற குடும்ப பெண்னே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் திருமணமாகி ஒருமாத காலம் ஆனநிலையில் சம்பவதினமான நேற்று (21) இரவு வீட்டின் முன்னால் உள்ள மாமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி கே.ஜீவராணி அவர்கள் சடலத்தினை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் விசாரணைகளை மேற்கொண்டு பிரேதத்ததை உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours