(வி.ரி.சகாதேவராஜா)
அந்தவகையில் அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய மல்வத்தை கணபதிபுரம் வித்தியாய மாணவர்களுக்கு கற்றலுபகரணங்களை கனடாவாழ் பேரின்பமூர்த்தி தம்பதிகள் வழங்கியுளளனர்.
மாவட்டத்தின் சமுகசேவையாளர் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறிலினூடாக இவ்வுதவிகள் நேற்று பாடசாலை மாணவர்க்கு வழங்கிவைக்கப்பட்டன.
யாழ்.மண்ணைச்சேர்ந்த திரு போன்பமூர்த்தி தம்பதியினரின் புதல்வன் கிருஷேந்திரா 18வயதில் மரணித்து நேற்றுடன் 12வருடங்களாகின்றன. அதனையொட்டி பல்வேறு உதவிகளை தாயகத்தில் தவிசாளர் ஜெயசிறிலினூடாக நேற்று மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட பின்தங்கிய பாடசாலை இதுவாகும். வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா அலுவலுகம் சார்பில் கலந்துகொண்டார்.






Post A Comment:
0 comments so far,add yours