ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாக மாவட்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் (01) மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதியொன்றில் கட்சியின் மாவட்ட முகாமையாளர் லிங்கராஜா தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ருவன் விஜேவர்த்தன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சஞ்சித் சமரசிங்க மற்றும் ஆசுமாரசிங்க உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுபப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கட்சியின் பின்னடைவுகள், சாதக பாதக நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டதுடன், கூட்டுக் கட்சிகளின் ஆதிக்கம், அதனால் ஏற்பட்ட பாதக நிலைமை அவற்றினை முகங்கொடுத்தல் எவ்வாறு போன்றன தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. கடந்த பாதீடுகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களின் நிலைப்பாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரைடப்பட்டது. அத்துடன் உறு;பினர்களின் பல்வேறு கருத்தாடல்கள் குறித்து விளக்கமும் அறிக்கப்பட்டது.

மிக விரைவில் கட்சியின் மறுசீரமைப்பு விடயங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதன்படி மாவட்ட ரீதியான குழுக்களை நியமிப்பது தொடர்பில் மாவட்ட ரீதியான அணுகுமுறைகளைக் கையாண்டு அதன்படி செயற்படவுள்ளதாகவும், தேர்தல் கால செயற்பாடுகள் குறித்தும் மாவட்ட மட்ட குழுக்களே தீர்மானிக்கும் சக்தியாக அமையும் எனவும் இதன்பொது உறுதியளிக்கப்பட்டது.

இதேவேளை மாவட்ட மட்ட உறுப்பினர்களினால் கட்சியின் தேசியப்பட்டியல் நியமனத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கே வழங்குமாறு பரிந்துரை மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours