துதி
வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் மகளிர் தின கவனயீர்ப்புப் செயற்பாடு மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. சங்கத்தின் தலைவி சரசகோபால் சத்தியவாணி தலைமையில் இந்நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் இக் கவனயீர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், வீட்டு வேலைத் தொழிலாளர்கள் இலங்கையில் மதிப்பற்ற தன்மையில் காணப்படுகின்ற நிலை மாற்றப்பட வேண்டும். இலங்கை வாழ் வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு அரசமைப்பினூடாக ஒரு சட்டப் பாதுகாப்பு அவசியம், வீட்டு வேலைத் தொழிலாளர்கள் பாரபட்சமாகப் பார்க்கப்படும் நிலை மாற்றப்படல் வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இக் கவனயீர்ப்பு செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது அவ்விடத்திற்கு வருகை தந்த மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் ஆகியோர் வீட்டு வேலைத் தொழிலாளர் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன், அவர்களால் வழங்கப்பட்ட மகஜர்களையும் கையேற்றுக் கொண்டனர்.




Post A Comment:
0 comments so far,add yours