(க.விஜயரெத்தினம்)
சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளுமை மிக்க பெண்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றத்திற்கான வலையமைப்பு மற்றும் Leo club of Cecilian's ஆகியன இணைந்து "ஆளுமை மிக்க தலைமைத்துவம்" எனும் தொனிப்பொருளில் ஒரு நிகழ்வினை நடாத்தியது.
ஆளுமை மிக்க தலைமைத்துவத்துடன் பல துறைகளில் தலைமைத்துவத்தில் உள்ள பெண்களை கௌரவிப்பதும் , பெண்பிள்ளைகளை ஊக்குவிப்பதும் இந் நிகழ்வின் முக்கிய நோக்கமாக உள்ளது.
இதன் அடிப்படையில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் ந. சத்தியானந்தி, மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழு செயலாளர் மங்களேஸ்வரி சங்கர் ஆகிய இருவருக்கும் ஆளுமை மிக்க தலைமைத்துவம் எனும் பாராட்டு சின்னம் இவ் வலையமைப்பினரால் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் நாட்களில் நடைபெறும் எனவும் மாற்றத்திற்கான வலையமைப்பின் இணைப்பாளர் தெரிவித்தார்






Post A Comment:
0 comments so far,add yours