விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட முனைக்காடு (கிழக்கு) பிரதேசத்தை சேர்ந்த (64) வயதுடைய வேலப்போடி பசுபதி என்பவர் தனது வீட்டிலிருந்து துவிச்சக்கர வண்டியில் முனைக்காடு பிரதான வீதியை கடக்க முற்பட்ட போது அதேவீதியினூடக பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற நபர் ஒருவர் குறித்த நபரை அடிதுச்சென்றதில் படுகாயமடைந்த நிலையில் குறித்த நபர் பிரதேச வாசிகளின் உதவியுடன் மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் விபத்தினை ஏற்படுத்திய நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு பதில் நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours