(மண்டூர் மேலதிக நிருபர்)


அங்கவீனமுடைய முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கொக்குவில் முதலாம் குறுக்கு மட்டக்ளப்பு எனும் முகவரியையுடைய ஒரு பிள்ளையின் தந்தையான 59 வயதுடைய சீனித்தம்பி யோகராசா என்பவரே வீட்டில் அனைவரும் தனது வீட்டில் நித்திரை செய்தபின்னர்  தனது வீட்டு வாசலில் உள்ள மரத்தில் தான் செலுத்திச்செல்லும் இரு சக்கர வண்டியின் மேல் ஏறி தன்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் நேற்று(28) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு பதில்  நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours