(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பில் இந்திய இராணுவத்தினை இலங்கையில் இருந்து வெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டம் இருந்து ,உயிர்நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் 33ஆவது நினைவு தினம் இன்று திங்கட்கிழமை(19)காலை 6.15 மணியளவில் மட்டக்களப்பு நாவலடியில் அவரது சமாதியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த நினைவேந்தலில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்தின்,ஞா.ஶ்ரீநேசன், மட்டு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன், மாநகரசபை உறுப்பினர்கள்,ஏறாவூர் பற்று தவிசாளர் எஸ்.சர்வாணந்தன்,முன்னால் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா,மாநகரசபை உறுப்பினர்கள்,ஆகியோரால் 33 ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியுடன் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.தீயாகதீபம் அன்னை பூபதி 1988.03.19 ஆம் திகதியிருந்து 1988.04.19 வரையில் உண்ணா விரதமிருந்து உயிர்நீர்த்தமை குறிப்பிடத்தக்கது.இவ்வாறு தீயாகதீபம் அன்னை பூபதிக்கு விளக்கேற்றி,அஞ்சலி செலுத்திய பின்பு குறித்த இடத்திற்கு பொலிசார் வருகை தந்தவுடன் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் அங்கிருந்தவர்கள் சமாதியை விட்டு வெளியேறியுள்ளனர்.



Post A Comment:
0 comments so far,add yours