தமிழ் சிங்கள புத்தாண்டை தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தின் பணிகள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (19) முற்பகல் அலரி மாளிகையில் ஆரம்பமாகின.

இதன்போது கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதமர் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

பிரதமர் அலுவலக ஊழியர்களும் புத்தாண்டில் தமது பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக கௌரவ பிரதமரின் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டமை விசேட அம்சமாகும்.

குறித்த நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே, பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி திரு.யோஷித ராஜபக்ஷ, மேலதிக செயலாளர்கள், சிரேஷ்ட உதவி செயலாளர்கள் உள்ளிட்ட பிரதமர் அலுவலக ஊழியர்கள் மற்றும் கௌரவ பிரதமரின் கீழுள்ள அமைச்சுக்களின் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours