.


(றாசிக் நபாயிஸ்)

மருதமுனை ஏ.ஆர்.ஏ.அஸீஸ் பவுண்டேஷனின் ஏற்பாட்டில் அஸீஸ் அவர்களின் கல்வி, சமூகசேவை மற்றும் அரசியல் பற்றிய ஆய்வு தொகுப்பு நூல் ஒன்றை வெளியீடு செய்வது தொடர்பான முதலாவது கலந்துரையாடல் (18) இஸ்லாம் நகர் பகுதியில் அமைந்துள்ள அஸீஸ் ஞாபகார்த்த அறிவியல் நிலையத்தில் பவுண்டேஷனின் தலைவர் கலாநிதி ஏ.ஏ.எம்.நுபைல் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது அஸீஸ் அவர்களின் கல்விப்பணி, சமூகப்பணி மற்றும் அரசியல் ஈடுபாடு தொடர்பாக தகவல்கள் திரட்டுவது எனவும் அவரின் சேவைகளை தனித்தனி தலைப்புக்களில் தொகுத்து நூலுருவாக்குவது எனவும் நாடு தழுவிய ரீதியில் உள்ள 
அவரின் மாணவர்களிடம் இருந்து தகவல்களை பெற்றுக் கொள்வது எனவும் 2012/04/19 இல் மரணித்த அன்னாரின் 09 வருட நிறைவில் எடுக்கப்பட்ட இந்த முடிவின் பிரகாரம் 10வருட நிறைவில் நூல் வெளியிடுவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

துறைசார்ந்தவர்களை கொண்டு தொகுக்கப்படவிருக்கும்
இந்நிகழ்வில்
ஏ.ஆர்.ஏ.அஸீஸ் பவுண்டேஷனின் உயர் பீட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours