புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரசின் 5000ருபா நிவாரணக்கொடுப்பனவு வழங்கும் திட்டம் நேற்று(12)திங்கட்கிழமை காரைதீவில் ஆரம்பமானது.
பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் இத்திட்டத்தை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களைக் கொண்டு வீடுவீடாக வழங்கிவருகிறார்.
காரைதீவு சமுர்த்தி வங்கியூடாக 1811குடும்பங்களும் கரடித்தோட்டப்பகுதியில் 1402குடும்பங்களுமாக மொத்தம் 3213 குடும்பங்கள் இந்த 5000ருபா கொடுப்பனவைப்பெற தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என பிரதேச செயலர் சிவ.ஜெகராஜன் தெரிவித்தார்.



Post A Comment:
0 comments so far,add yours