வி.ரி.சகாதேவராஜா

கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட குறுந்திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான முதலாவது பயிற்சிப்பட்டறை நேற்று(31)புதன்கிழமை காரைதீவில் ஆரம்பமானது.

காரைதீவு விபுலாநந்த கலாசார மண்டபத்தில் மாகாணப்பணிப்பாளர் சரா.நவநீதன் தலைமையில் ஆரம்பமான இப்பட்டறை இன்று(01) நிறைவடையவிருக்கிறது.
அங்குரார்ப்பணவிழாவிற்கு பிரதமஅதிதியாக காரைதீவு பிரதேச செலாளர் சிவ.ஜெகராஜன் கௌரவஅதிதியாக தவிசாளர் கி.ஜெயசிறில் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

பிரபல எழுத்தாளர் உமாவரதராஜன் பட்டறையின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார்.வளவாளர் ஞானதாஸ் முதலாவது விரிவுரை நிகழ்த்தினார்.

குறும்பட இயக்குனர்கள் நடிகர்கள் என சுமார் 50பேர் கலந்துகொண்டனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours