(க.விஜயரெத்தினம்)

தமிழ்தேசியத்தின்பால் ஓங்கி ஒலித்த குரல், ஓய்வுநிலை ஆயர் அமரர் வண இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் இறுதி நல்லடக்க நாளான இன்று திங்கட்கிழமை (05) பி.ப 4, மணியளவில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தைசெல்வா சிலை வளாகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.


மட்டக்களப்புமாவட்ட தமிழ்தேசியகூட்டமைப்பின் ஏற்பாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுகட்சி சிரேஷ்ட தலைவருமான பொ.செல்வராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற  அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் மறைந்த முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அவர்களின் படத்திற்கு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மெழுகுவர்த்தி சுடர்கள் ஏற்றப்பட்டு மௌனப் பிரார்தனையும், மலரஞ்சலி செலுத்தப்பட்டு,அன்னாரின் நினைவு தொடர்பாக நினைவுரையும்,இரங்கல் உரையும் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன்,ஞா.ஸ்ரீநேசன்,தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இ.பிரசன்னா,மா.நடராஜா,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் எஸ்.சத்தியசீலன்,தமிழரசுகட்சி முக்கிய பிரமுகர் மா.உதயகுமார்,மதப்பெரியார்கள்,மாநகரசபை உறுப்பினர்கள்,உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள்,தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரளவார்கள்,ஊடகவியலாளர்கள், கலந்துகொண்டனர்.


ஆன்மீக தலைவராக இருந்து தமிழ்தேசியத்தின்பால் அக்கறையுடன் செயலாற்றி வடக்கு கிழக்கு மக்கள் பல நெருக்கடிகளையும், கொலை அச்சுறுத்தல்களையும், தடைகளையும் சந்தித்த வேளைகளில் எல்லாம் தேசியரீதியாகவும் ,சர்வதேச ரீதியாகவும் துணிந்து குரல் கொடுத்த உன்னத மகான் ஆண்டகை இராஜப்பு ஜோசப் அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மட்டக்களப்பில் இடம்பெறும் இந்த அஞ்சலி வணக்க நிகழ்வானது கொரோணா நோய் பாதுகாப்பை கருத்தில்கொண்டு முக்கவசம், சுகாதாரநடைமுறைகளை பின்பற்றி  நடைபெற்றது.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours