எருவில் கிரமத்தினை சேர்ந்த திரு.இரத்தினசிங்கம் ஜெயபாலசிங்கம் அவர்களின் ரூபாய் ஐம்பதாயிரம் (50000/-)நிதி அனுசரணையில்"எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினால்(ESDA)கல்வி மற்றும் வாழ்வாதார பணிகள் முன்னெடுக்கப்பட்டதுESDA அமைப்பின் எருவில் மண் சார்பான தூர நோக்குடனான சேவைகளை பாராட்டியதுடன் அமைப்பில் இணைந்து கொண்ட ஜெயபாலசிங்கம் அவர்கள் க.பொ.த.உயர் தரத்தில் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்று சித்தியடைந்த காலம் தொடக்கம் ,எருவில் கிராமத்தில் சமயம் சார்ந்த பணிகளை முன்னெடுத்த சிறப்புக்குரியவர்,பஜனை குழுக்களை உருவாக்கி எருவில் கிராம மாணவர்களுக்கு சமய கலாச்சார விடயங்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்ததுடன், ஒழுக்க பண்புள்ள மாணவர்களையும் வளர்த்தெடுத்தவர்,தாம் தொழில் நிமிர்த்தம் வெளிநாடு சென்ற காலத்திலும் பல்வேறு உதவிகளை வழங்கியவர், இவரது நிதி அனுசரணையில், எருவில் கிராமத்தில் பல்கலை கழக அனுமதி பெற்ற மாணவி ஒருவருக்கு அவரது கல்வி வளர்ச்சிக்கு ஊக்குவிப்பாக ரூபாய் 30000/-ESDA அமைப்பினால் வங்கி கணக்கில் வைப்பில் இடப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது,
அத்துடன் எருவில் ஐங்கரா கலைக்கழகம் மாணவர்களின் பல்வேறு திறமைகளை வளர்ப்பதற்கு நடாத்திய போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்குவதற்காக ரூபாய் 10000/-யும்,
மிகுதி 10000/- ரூபாயும் எருவில் கிராமத்தினை சேர்ந்த மூன்று குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளும் ESDA அமைப்பின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது,
இந்த நிகழ்வில் ESDA அமைப்பின் ஆலோசகரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமாகிய திரு பேரின்பநாயகம் ,அமைப்பின் செயலாளர் ஆசிரியர் ஆர். ஜீவராஜ், பட்டிருப்பு கல்வி வலய ஆசிரிய வளவாளர் திருமதி ம.குருபரன் , ESDAஅமைப்பின் சார்பாக நிதி அனுசரணை வழங்கிய இ.ஜெயபாலசிங்கம் மற்றும் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.








Post A Comment:
0 comments so far,add yours